நாளைக்கு எங்கள் ராக்கியின் பிறந்த நாள் (22/7/2012).
எங்கள் ராக்கி சதய நட்சத்திரத்தில் பிறந்த ஓர் ராஜ குமாரன்.ஆம் ராஜேந்திர சோழன் பிறந்த நட்சத்திரமாம்.
நட்சத்திரங்களுக்கு உயிர்களிடம் பேதம் இல்லை,மனிதர்களுக்கு மட்டுமே.
எங்களது தனிமைக்கும்,தீடீரென புகுந்த வெறுமைக்கும் ஓர் பெரும் துணை அவன்.
.
இப்பொழுதெல்லாம் மனதில் பெருக்கெடுக்கும் அன்பை பகிர்ந்து கொள்ளக் கூட ஆள் இல்லா ஓர் அவசரத்தில் வாழ,அன்பு மீந்துபோன பழைய சோறு போல வாங்குவதற்கு ஆள் கூட இல்லாமல் தவிக்கிறது.
அவனோ எவ்வளவு அன்பு கொடுத்தாலும் போதாமல் மேலும் மேலும் கேட்டு வாலாட்டுவான்.
பகல் பொழுதில், வெளிச்சென்று உள்ளே வர, மேல் ஏறி முகம் நக்குவான்.
நடு இரவில் விழித்துப் பார்க்க,தூக்கம் மறந்து முகம் பார்த்து அமர்ந்திருப்பான்.
மனிதர்களிடம் காண முடியாத அன்பு.
அவனைப் பற்றி பகிர்ந்து கொள்ள நிறய்ய்ய உள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாய் பார்ப்போம்.
No comments:
Post a Comment