Friday, March 7, 2014





ராக்கியின் கண்களில் படித்த .....................

எங்கே செல்வாய் நீ?
எங்கே செல்வாய் ?
என்னிடம் எதோ சொல்லிவிட்டு
புரிந்தும் புரியாத
மானுட மொழியில் -
சூரிய
வெளிச்சம் தொடத
தரைமீது கம்பளம் விரித்து
என்னை படுக்கச் செய்துவிட்டு
எங்கே செல்வாய் நீ?

தூரத்தில் அமர்ந்து
உன் பாதங்களின் அசைவில்
பாதிக் கண் வைத்து
தூங்குகையில் கூட
சிறு அதிர்வில் 
கண் விழித்து
நான் பார்க்க -

வளர்ப்புமீன்கள்
தொட்டியின் மட்டம்வரைசென்று
மூச்சு வாங்கி
கீழ் வருவது போல்
நீயும்
வெளிச்சென்று
உலகைக் கண்டு
மீண்டும் என்னருகில் வர
உடைந்து போகும் தனிமை
எனக்கு மட்டும்.....

No comments: